×

187 வகையான டார்க் சாக்லெட் தயாரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் ஊட்டி சாக்லெட் நிறுவனம் இடம் பிடித்தது

ஊட்டி :  ஊட்டியில் உள்ள தனியார் ஹோம்மேட் சாக்லெட் நிறுவனம் 187 வகையான டார்க் சாக்லெட் தயாரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகினற்னர். பலரும் குடிசை தொழில் போன்று வீடுகளில் ேஹாம்மேட் சாக்லெட் தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். மேலும், சிலர் பெரிய அளவில் இந்த சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஊட்டியில் உள்ள தனியார் எம்.என்.,சாக்லெட் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் ஊட்டி ஆந்தகிரி அரங்கில் பெரிய ேஹாம்மெட் சாக்லெட் மியூசியத்தை நடத்தி வருகிறது.

இங்கு ஏராளமான சாக்லெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கண்டு ரசிப்பதுடன், அதனை வாங்கியும் செல்கின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனம் 187 வகையான டார்க் சாக்லெட்டுக்களை தயாரித்து கண்காட்சியில் வைத்துள்ளது. இந்தியாவிலேயே 187 வகையான டார்க் சக்லெட்டுக்கள் இங்கு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த நிறுவனம் இண்டியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளது.

இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், இந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் விவேக் கலந்துக் கொண்டு சான்றிதழ்களை வழங்கனார். எம்.என்., நிறவன உரிமையாளர் பாசுலூர் ரகுமான் கூறுகையில், ேஹாம்மெட் சாக்லெட் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இங்கு சாக்லெட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. சாக்லெட் குறித்தும், அதனை சாப்பிடுவதால் ஏற்படும் நண்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்தியாவில் முதன் முறையாக 187 வகையான டார்க் சாக்லெட்டுகள் தயாரித்ததற்காக எங்களது நிறுவனம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, பல்வேறு புதிய ரக ஹோம்மெட் சாக்லெட்டுக்கள் தயாரிக்க இது உந்து கோளாக அமையும், என்றார்.


Tags : Ooty Chocolate Company , Bhavoorchatram: A young woman who was undergoing treatment for childbirth at a private hospital in Bhavoorchatram died suddenly. Enraged
× RELATED தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு...