×

சண்டையிட பயந்து முதுகுக்கு பின் பேசுபவர்கள் அல்ல நானும் ஜெயலலிதாவும்; முதுகுக்கு பின்னால் குத்துபவர் மனிதனே கிடையாது: சசிகலா சாடல்

சென்னை: வெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலிதா விரும்பவில்லை மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மறைக்க எதுவும் இல்லை என வி.கே.சசிகலா சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார், திடிரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 3 வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் வாக்குமூலம் அளிக்கலாம் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருந்தது. நேரில் வரலாம், வழக்கறிஞர் வழியாக தெரிவிக்கலாம் அல்லது எழுத்து மூலமாக வாக்குமூலம் அளிக்கலாம் என ஆணையம் கூறியிருந்த நிலையில், நான் ஆறுமுகசாமி ஆணையம் கேட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தேன் என்றும், ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 5-தான், அரசியலுக்காக சிலர் அதை மாற்றி கூறுகிறார்கள் என்றும் சசிகலா தெரிவித்தார்.

டிசம்பர் 19-ம் தேதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து செல்ல நாள் பார்த்தோம். மேலும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பரிசு பொருள் வழங்க வேண்டும் என ஜெயலலிதா கூறியிருந்தார். வளையல், கம்மல் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை நகைக் கடையில் இருந்து வரவழைத்து ஜெயலலிதாவே தேர்தெடுத்தார். டிசம்பர் 15-ம் தேதி ஜெயலலிதா தன் கையாலேயே மருத்துவர்களுக்கு பரிசுப்பொருள் வழங்க திட்டமிட்டிருந்தார். மரணமடைந்த அன்றுகூட ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் என சசிகலா கூறினார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக அணியாக செயல்படுகின்றனர். எனவே, எல்லாருக்கும் பொதுவான ஆளாகவே நான் இருப்பதாக சசிகலா விளக்கமளித்தார். அதிமுகவை ஒன்றிணைக்க தேவையான பணிகளை தொடங்கி விட்டேன் விரைவில் அனைவரும் ஒன்றிணைவார்கள். பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் என்ன ஆலோசனை கூறுகிறார்களோ அதை நாடாளுமன்ற தேர்தலில் முடிவு செய்வதாக கூறினார். சண்டையிட பயந்து முதுகுக்கு பின் பேசுபவர்கள் அல்ல நானும் ஜெயலலிதாவும் என தெரிவித்தார். முதுகுக்கு பின்னால் குத்துபவர் மனிதனே கிடையாது என்று சசிகலா சாடியுள்ளார்.

Tags : Jayalalithaa ,Sasikala Sadal , Fight, back, Jayalalitha, punch, man, Sasikala, Sadal
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...