×

களைகட்டியது கிறிஸ்துமஸ் பண்டிகை!: ஈரோடு புஞ்செய் புளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்செய் புளியம்பட்டி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாடு மற்றும் ஆட்டுச் சந்தை அமோகமாக நடைபெற்றது. வியாழன்தோறும் நடந்த சந்தையில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவருவர். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் 10 கிலோ வெள்ளாடு ரூ.7,250க்கும் செம்மறி ஆடு ரூ.6,000 விற்பனை செய்யப்பட்டது. ஆடுகள் தவிர மாடுகளும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.

 50 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 110 கன்றுகள் 300 ஜொ்சி ரக மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் கறவை மாடுகள், வளா்ப்புக் கன்றுகளை வாங்க விவசாயிகள் ஆா்வம் காட்டினா். கறுப்பு வெள்ளை மாடு ரூ. 24 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வரையும், ஜொ்சி மாடுகல் ரூ. 22 ஆயிரம் முதல் 48 ஆயிரம் வரையும், சிந்து மாடுகள் ரூ. 16 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வரையும், நாட்டு மாடுகள் ரூ. 72 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒருகோடியே ஐம்பது லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags : Christmas Festive ,Erode ,Sliyampatti Marketplace , Christmas, goats, sales galore
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை