கடலூர் : கடலூரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்பட்டு இருப்பதால் மீனவ கிராமமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கடலூரியில் இன்று காலை முதலேயா மீனவ கிராமங்களில் கடல் என்பது கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஏற்கனவே வாங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கடலூர் மாவட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, கனமழை இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மக்களுக்கு அதுவும் ஏமாற்றம் மிஞ்சியது.
இந்நிலையில் வங்க கடலில் மீண்டும் இலங்கை அருகே குறைந்த காற்றுழத்த தாழ்வு உருவாகி உள்ளது. நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது, இதானால் வங்க கடலில் சுமார் 55 கிலோமீட்டர்களுக்கு பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவத்துறையினர் 20ம் தேதி முதல் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்,
இதனை தொடர்ந்து பெரிய பைபர் படகுகள், அனைத்து மீன் பிடிப்பு துறைமுகத்திலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட நிலையில் சிறிய படகுகள் அந்தந்த மீனவ கிராமங்களில் மீனவர்கள் நிறுத்தி வைக்க பட்டுள்ளனர். இன்று திடீரென்று காலை முதலே கடல் சிற்றம் என்பது அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது கடலூரில் கடல் சிற்றம் என்பது அதிகமாக உள்ளது, வழக்கத்தை விட கடல் அலைகள் என்பது வேகமாக ஆர்ப்பரித்து சீறிப்பாய்கின்றது.
தேவனப்பட்டினம், தாழங்குடா, உள்ளிட்ட கடற்கரை ஓரம் கருங்கல் தாண்டி அலைகள் என்பது சீறிப்பாய்கின்றது. படகுகள் நிறுத்தப்பட்ட இடங்கள் வரை அலைகள் வந்ததால் அதை தாண்டி மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்திவைத்துள்ளனர். படகுகள் நிறுத்தும் இடத்திற்கு அருகிலேயே கடல் அலை வந்து கொண்டு இருப்பதால், படகுகளை பாதுகாப்பான இடத்தில நிறுத்திக் கொண்டு இருக்கின்றனர். தாழங்குடம் என்ற மீனவ கிராமத்தில் 100 கும் மேற்பட்ட பைபர் படகுகள் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.