×

தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் கோலாகலம்: ஒரு லட்சத்து எட்டு வடை மாலையை அணிந்திருந்த ஆஞ்சநேயரை தரிசித்து வரும் பக்தர்கள்..!

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார். மார்கழி மாத அம்மாவாசை அன்று அனுமன் பிறந்ததால் அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஸ்வாமிக்கு 1,00,008 எண்ணிக்கை கொண்ட வடை மாலைகள் சாத்தப்பட்டது.

பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது உள்ளூர் மக்களும் பல்வேறு மாநில பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் 2 டன் எடையிலான பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயருக்கு காலை 10 மணிக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. பிற்பகல் 1 மணிக்கு ஜொலிஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். இரவு 10 மணி வரை சாமி தரிசனம் செய்திடும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

பஞ்சவடி ஆஞ்சநேயர்:
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால் மற்றும் சந்தனம் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்து யாக சாலையில் புனிதநீர் கலசம் எடுத்துவரப்பட்டு ஆஞ்சநேயருக்கு நீராட்டு நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு விஷேச ஏலக்காய் மாலை அனுவிக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சி அளிக்க உள்ளார். இதில் புதுச்சேரி, விழுப்புரம், சிதம்பரம், பண்ருட்டி மற்றும் கடலூர் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை ஸ்ரீ ராமருக்கு திருக்கல்யாண பூஜை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 


Tags : Anuman Jayanti ,Tamil Nadu , Hanuman, Jayanti, Celebration, Vada, Mala, Devotee
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...