அமைச்சர்களை அவதூறாக பேசிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது நடவடிக்கை: எஸ்பியிடம் புகார் மனு

விழுப்புரம்: முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக  பேசிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது எஸ்பி அலுவலகத்தில்  திமுகவினர் புகார் மனு அளித்தனர்.  தளபதி பேரவையின் தலைவர் அருள்காந்த்  தலைமையில் திமுகவினர் விழுப்புரம் எஸ்பியிடம் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:  

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள்  அமைச்சர் சி.வி சண்முகம், கடந்த 14ம்தேதி விழுப்புரத்தில் நடந்த அதிமுக  பொதுக்கூட்டத்தில், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசி அவரது பெயருக்கும்,  புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் அவதூறுகளை பரப்பி வருகிறார். தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசிவருகிறார்.

இது தமிழக மக்களின் மனதை பெரிய அளவில் காயப்படுத்தி  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் வளர்ச்சிப்பாதையில்  முதலிடத்தில் உள்ளதை பொறுத்து கொள்ளமுடியாமல் இது போன்று அவதூறாக  பேசி வருகிறார். எனவே அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: