மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் நொறுக்கி விடுவோம்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கொதிப்பு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் அடி நொறுக்கி விடுவோம். காவித்துண்டைப் போட்டு அவமானப்படுத்தியவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். காவி இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்க வேண்டும். எம்ஜிஆர் சமூகநீதித் தலைவர்.

அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழிபிறவி. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சட்டம், ஒழுங்கு பிரச்னை இல்லை என்றால் பங்கேற்பார்’’ என்றார்.

ஓபிஎஸ்சின் கருத்து, அதிமுக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு தொடர்பான கேள்விகளுக்கு, பதில் அளிக்க செல்லூர் ராஜூ மறுத்து விட்டார்.

Related Stories: