ஏரியா சபைகள் அடங்கிய வரைபட மென்நகல் இணையத்தில் வெளியீடு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஏரியா சபைகள் அடங்கிய வரைபடத்தின் மென்நகல் பொதுமக்கள் பார்வையிடும் பொருட்டும்  சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை 2022ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டிலும் 10 ஏரியா சபைகள் மற்றும் ஒரு வார்டு குழுவினை ஏற்படுத்த விதிகள் வகுக்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் ஏரியா சபைகள் அமைக்கப்பட்டு, சென்னை மாவட்ட அரசிதழில் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் மென்நகல் மற்றும் வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏரியா சபைகள் அடங்கிய வரைபடத்தின் மென்நகல் ஆகியவை பொதுமக்களின் தகவலுக்காகவும், பார்வையிடும் பொருட்டும்  சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில், https://chennaicorporation.gov.in/gcc/area_sabha/ என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: