திருவொற்றியூர்: மாவரத்தில் நாளை நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில், எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். சமத்துவ மக்கள் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில், நாளை மாலை 5 மணிக்கு எம்எம்டிஏ முதல் மெயின் ரோடு பகுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு, மாவட்ட செயலாளர் விஜயன் தலைமை வகிக்கிறார்.
பாதிரியார் சாமுவேல், கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகிறார். இதில், சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி, 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். விழாவில் நிர்வாகிகள் பலர் கலந்துகொள்கின்றனர்.
