×

மக்கள் முகக்கவசம் அணிய மாநில அரசு அறிவுறுத்த வேண்டும்: மன்சுக் மாண்டவியா வலியுறுத்தல்

 டெல்லி: கொரோனாவை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்குவதால் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் புதிய வகை கொரோனா விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கமளித்தார்.

மேலும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயாராக இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் விழிப்புடன் இருக்குமாறு தான் அறிவுறுத்தியிருக்கிறார். எனவே, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து கொரோனா நோயாளிகளின் மாதிரிகளையும் பகுப்பாய்வு செய்ய மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலகளாவிய கொரோனா நிலவரத்தை கண்காணித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.


Tags : State government ,Mansukh Mandaviya , people, mask, state, government, manchuk, mandavia
× RELATED சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தும்...