×

ரஷ்யாவின் கோர பிடியில் சிக்கி கையை இழந்த உக்ரைன் வீரர்!: ரோபாட்டிக் கையுடன் பயிற்சி.. மீண்டும் போரிட விரும்புவதாக உருக்கம்..!!

மெக்சிகோ: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வீரத்துடன் போராடி கையை இழந்து கோமா நிலைக்கு சென்ற உக்ரைன் வீரர் ஒருவர், நாட்டிற்காக மீண்டும் போரிட வேண்டும் என்ற முனைப்புடன் செயற்கை ரோபாட்டிக் கையை பொருத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நேட்டோவில் சேர ஆர்வம் காட்டியதற்காக உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இதில் இரு தரப்பிலும் பல இன்னுயிர்கள் மாண்டியிருக்க, சிலர் நாட்டிற்காக உடல் உறுப்புகளை இழந்து ஆறா காயங்களுடன் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் முடங்கி கிடக்கின்றனர்.

அந்த வரிசையில் இடம் பிடித்த ஒருவர் தான் உக்ரைன் வீரர் ஓலே. ரஷ்யாவுடன் கிருமியா இணைக்கப்பட்ட அந்த 2014ம் காலகட்டத்தில் உக்ரைன் ராணுவத்தில் தன்னார்வலராக சேர்ந்திருக்கிறார் ஓலே. அது முதல் நாட்டு பற்றுடன் சகல போர் பயிற்சிகளையும் கற்று தேர்ந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தியதும், ஒட்டுமொத்த மக்களுடன் சேர்ந்து ஓலேவும் ஆயுதங்களை ஏந்தி இருக்கிறார். பல மாதங்கள் நீடித்து வரும் இந்த போரில் ஓலே அவரது வலது கை மற்றும் ஒரு கண்ணில் பார்வை குறைபாடு அடைந்து கோமா நிலைக்கு சென்றிருந்தார்.

உக்ரைன் மக்களின் இந்த தவிர்க்க முடியாத நிலையை கண்டு உலக நாடுகள் உதவிய சூழலில் மெக்சிகோவும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. போரில் கை, கால்களை இழந்து தவிப்போருக்கு செயற்கை ரோபாட்டிக்  கைகளை குறைந்த செலவில் பொறுத்த உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் சிகிச்சைக்காக மெக்சிகோ சென்ற ஓலே, சக உக்ரைன் வீரர் டானிலோ உடன் சேர்ந்து கடந்த 3 மாதங்களாக செயற்கை ரோபாட்டிக்  கை பொருந்தியபடி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

உடல் தகுதியை மெருகேற்றிக்கொள்ள குத்துசண்டை பயிற்சியையும் ஓலே மேற்கொண்டு வருகிறார். தன்னம்பிக்கையுடன் வளம் வரும் உக்ரைன் வீரர் ஓலே, நாட்டுக்காக மீண்டும் போரிட விரும்புவதாக தெரிவிக்கிறார். அதற்கு முன் தனது மகளின் 12வது பிறந்தநாளை கொண்டாட விரும்புவதாகவும் நெகிழ்ச்சியுடன் ஓலே கூறுகிறார்.


Tags : Russia , Russia, arm, Ukraine soldier, robotic arm
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...