×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் முத்துப்பேட்டை அலையாத்தி காடுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

முத்துப்பேட்டை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் முத்துப்பேட்டை அலையாத்தி காடுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவு கொண்ட காடாகும். இந்த அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும்.

இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறத்தவறுவதில்லை.

அந்த அளவிற்கு ஒற்றுமொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொக்க பூமியாக இங்கு காணமுடியும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கல் கடல் பகுதியில் 45 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று 21ம்தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்து அறிவித்துள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்ற 9ந்தேதி காட்டிற்கு செல்ல அனுமதி மறுத்த நிலையில் கடந்த 19ம்தேதி மீண்டும் அனுமதித்து இருந்தது. தற்போது மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இன்று (நேற்று) முதல் மறு அறிவிப்பு வரும் வரை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்லவும், சுற்றுலா பயணிகள் படகுகள் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வந்து ஏமாற வேண்டாம் என வன சரக அலுவலர் ஜனனி தெரிவித்துள்ளார்.

Tags : Muthupet Alayati Forest , Low pressure zone, Muthuppettaya forest, off limits to tourists
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால்...