×

மஞ்சூர் - கோவை சாலையோரங்களில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு

ஊட்டி: மஞ்சூரில்  இருந்து கோவை செல்லும் சாலையில் பல இடங்களில் குறிஞ்சி பூக்கள்  பூத்துள்ளதால் அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஸ்ட்ரோ பைலைன்தீஸ்  குந்தியானா எனப்படும் குறிஞ்சி மலர்கள் மலைகளில் பூக்கக்கூடியது. இந்தக்  குறிஞ்சி மலர் குடும்பத்தில் 200 வகைச் செடிகள் உள்ளன. இவை அனைத்தும் ஆசிய  நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

இதில், 150 வகைகளை கொண்ட குறிஞ்சி  மலர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளான , நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில்  மட்டுமே காணப்படுகிறது. நீலக்குறிஞ்சி மலர்ச் செடிகள் மலைப்பாங்கான  இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில்  இருக்கும். அதன் பூக்கள் ஊதா நிறுத்திலோ அல்லது நீல நிறத்திலோ காணப்படும்.  குறிஞ்சி மலர்களில் பெரும்பாலானவை கோயில் மணிகளின் உருவத்தை ஒத்து  காணப்படும்.

இதில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி  மலர்கள் முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்கள்  காணப்படுகிறது. இதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி  மலர்களே சிறப்பானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில்  2017ம் ஆண்டு ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி மலைப்பகுதிகளில் அதிகளவு இந்த  குறிஞ்சி மலர்கள் பூத்துக் காணப்பட்டது. இதனை காண உள்ளூர் மக்கள் மற்றும்  சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா  எடுக்கப்பட்டது. அதன்பின், நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு குறிஞ்சி மலர்கள்  பூக்கவில்லை.

எனினும், அங்காங்கே ஒரு சில செடிகளில் மட்டும் குறிஞ்சி  மலர்கள் பூத்துக் காணப்பட்டன. குறிப்பாக, தொட்டபெட்டா மலைச்சரிவுகள்,  தும்மனட்டி செல்லும் சாலையோரங்களில் இந்த மலர்கள் செடிகள் காணப்பட்டன. இதனை  சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து சென்றனர்.  இந்நிலையில், மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில்  கெத்தை முதல்  அத்திக்கடவு வரையில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் குறிஞ்சி  மலர்கள் பூத்துள்ளன. சாலையோரங்களில் ஆங்காங்கே புதர்கள் போன்று குறிஞ்சி  மலர்கள் பூத்துள்ளன. இதனை இவ்வழித்தடத்தில் செல்லும் சற்றுலா பயணிகள்  மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Tags : Manjur ,Goa , Manjoor - Coimbatore Road, Kurinji Flowers, Tourists
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...