×

சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜைக்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் 27ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட இருக்கின்றனர். மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஒரு நாளில் 1,000 பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடனடி முன்பதிவு நடைமுறையும் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, கோவில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வருகின்ற 27ம் தேதி நடைபெறவுள்ள மண்டல பூஜையில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 26ம் தேதி மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற இருப்பதாகவும், இதற்காக பத்தனம்திட்டா, ஆரன்விலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் நாளை புறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அருள்வார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க அங்கி மலைக்கு எடுத்துவருவத்தையொட்டி 26ம் தேதி மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டும் தரிசன முன்பதிவு அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Tags : Zone ,Sabarimala , Sabarimala, Mandala Puja, 40 thousand devotees
× RELATED சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன்...