தெற்கு ரயில்வே 964 பணியிடங்களில் 80% வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா?: அன்புமணி கேள்வி

சென்னை: . பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தெற்கு   ரயில்வேயில் 80% பணியிடங்களுக்கு வட இந்தியர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் கொண்டு வரப்பட்டிருப்பதைப் போன்று, பிற தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் பாடத் தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பெரு நிறுவனங்களின் அமைப்பு சார்ந்த பணிகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: