×

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமூக வலைதளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது நெஞ்சம் நிறைந்த 50 ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

தாங்கள் எப்போதும் அமைதியுடனும் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இந்நன்னாளில் விழைகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஜெகன் மோகனிடம் தொலைபேசி மூலம் பேசி வாழ்த்து தெரிவித்தார்.



Tags : M. K. Stalin ,Andhra Chief Minister ,Jagan Mohan , M. K. Stalin congratulates Andhra Chief Minister Jagan Mohan
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்