×

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு வசதியாக செல்ல சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரம்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் சிறப்புக்கட்டண ரயில் (06021) தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று  (டிச.22) இரவு 9 மணிக்கு புறப்படும்.
அடுத்த நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயிலானது திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து நாளை  மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 3.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.  அதே போல் தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06041) டிச.23ம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06046,06045) எர்ணாகுளத்தில் இருந்து டிச.22 (இன்று) இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும், மறுமார்க்கத்தில் சென்னை-எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாளை மறுநாள் (டிச.23) மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த இருமார்க்கத்தில் செல்லும் சிறப்பு ரயில்கள் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். எர்ணாகுளத்திலிருந்து வரும் ரயில் கூடுதலாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

Tags : Christmas ,Southern Railway , Christmas Special Fare Train Operation: Southern Railway Information
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...