×

எஸ்.பி.வேலுமணி சொத்து குவிப்பு வழக்கில் அரசின் வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

புதுடெல்லி:  சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தரப்பில் மேல்முறையீடு செய்தால், எங்களது வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம், திமுக குற்றம் சாட்டின.

இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்து, அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,‘‘சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்ற உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் மேல்முறையீடு செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்துள்ளார். அதேப்போன்று இதே விவாகரத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : SB ,Velumani ,Tamil Nadu government ,Supreme Court , Don't pass order without hearing government's arguments in SB Velumani asset hoarding case: Tamil Nadu government's caveat petition in Supreme Court
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...