அரியானாவில் என்ஐஏ சோதனை ஆயுதங்கள் பறிமுதல்

புதுடெல்லி:  தீவிரவாத அமைப்புக்களுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அரியானாவில் பிரபல தாதாக்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அரியானா போலீசாருடன் இணைந்து சவுதாலா கிராமத்தின் சோட்டுபாட் மற்றும் தகாத்மால் கிராமத்தின் ஜக்கா ஆகிய பகுதிகளில் தாதாக்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 2 நாள் நடந்த சோதனையில் இரண்டு பிஸ்டல், ரைபிள், அம்மோனியம், தோட்டாக்கள், கூர்மை வாய்ந்த ஆயுதங்கள் பறிமுதல்  செய்யப்பட்டது” என்றார்.

Related Stories: