×

புளியந்தோப்பில் 30 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்தது ஆட்டோ சேதம்; போக்குவரத்து பாதிப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பில் பழமையான மரம் விழுந்து சரக்கு ஆட்டோ நொறுங்கியது. சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை கிரேஸ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 30 ஆண்டுகள் பழமையான தூங்குமூஞ்சி மரம் இருந்தது. இந்த பகுதியில் சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மரத்தின் வேர்கள் தளர்ந்து உறுதி தன்மை இல்லாமல் காணப்பட்டது. இதையடுத்து அந்த மரத்தை பலப்படுத்தும் பணியை துவங்க இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில், அந்த மரம் திடீரென்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதனால் இதில் ஒரு சரக்கு ஆட்டோ நொறுங்கியது. மரம் விழுந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் வந்தனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து போலீசார் மரத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதன்காரணமாக சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : tamarind , 30-year-old tree falls in tamarind causing auto damage; Traffic damage
× RELATED மாவட்டத்தில் விளைச்சல் அமோகம்;...