×

டுவிட்டர் தலைமை பதவிக்கு முட்டாள் கிடைத்தால் ராஜினாமா: எலான் மஸ்க் அதிரடி டுவிட்

வாஷிங்டன்: டுவிட்டர் தலைமை பதவிக்கு முட்டாள் எவறேனும் கிடைத்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று எலான் மஸ்க் டுவிட்டரில் ெதரிவித்துள்ளார். உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான நிலையில், அவர் அவ்வப்போது பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பதவியில் தொடரலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து கருத்து கணிப்பு நடத்தினார். அதில் பெரும்பாலானோர் அவர் பதவி விலக வாக்களித்தனர்.

இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட பதிவில், ‘டுவிட்டர் சிஇஓ பதவிக்கு முட்டாள் யாராவது கிடைத்த பின் எனது பதவியை ராஜினாமா செய்வேன்; அப்படி நான் ராஜினாமா செய்தால் மென்பொருள் நிபுணர்களுடன் வேறுபணியை செய்வேன்’ என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


Tags : Twitter ,Elon Musk , If you get a fool for the position of Twitter, resign: Elon Musk action tweet
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...