பள்ளி பாடப்புத்தகங்களில் மதங்கள், வேதங்கள், பாகவத்கிதை, ஆகியவற்றை இடம் பெறவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. கல்வி, விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற, கல்வி தொடர்பான குழு சமீபத்தில் தனது அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களின் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
விக்ரமாதித்தன், சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர பேரரசு, கொத்தவனா, திருவிதாங்கூர் வடகிழக்கு பிராந்திய மன்னர்கள் குறித்த வரலாறு பள்ளி பாடங்களில் இடம் பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று புத்தகங்களில் இந்தியா சுதந்திர போராட்டத்தின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உள்ள நிலைக்குழு, அந்த தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது.
மதங்கள், இந்திய வேதங்கள், பகவத் கீதை, போதனைகளுக்கு பள்ளி புத்தகங்களில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. செம்மொழியான தமிழுக்கு பள்ளி பாடபுத்தகங்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஒழுக்க நெறி போதிக்கும் திருக்குறள், பாடப்புத்தகங்களில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.