×

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலை,  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை,  மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் வழங்கினார்.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் அவர்களிடம் வழங்கினார். வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது. வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர்களான நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது.  மறைந்த தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் நூல்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் என்கிற நாகலிங்கம் அவர்களின் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சோமலெ அவர்களின் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான  காசோலை, முனைவர் ந. இராசையா நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை பிரகாஷ் அவர்களின் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர், மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்காக மரபுரிமையரிடம் வழங்கினார்.

தமிழ்ச் செம்மல் விருது
2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி. சிவசிதம்பரம் அவர்களுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மா. சோதி அவர்களுக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் அ. மாயழகு அவர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துரத்தினம் அவர்களுக்கும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.நாகராசன் அவர்களுக்கும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த  முனைவர் கடவூர் மணிமாறன் அவர்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. இரா. துரைமுருகன் அவர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் சு. கந்தசாமி பிள்ளை அவர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த இரா. எல்லப்பன் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆ. இரத்தினகுமார் அவர்களுக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மானூர் புகழேந்தி அவர்களுக்கும்; சிவங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் வ. தேனப்பன் அவர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கே. சுப்பிரமணியன் அவர்களுக்கும்,

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வே. மாணிக்காத்தாள் அவர்களுக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. இரா. மோகன் குமார் அவர்களுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுக சீதாராமன் அவர்களுக்கும், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் கண்ணிமை அவர்களுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. துரை. தில்லான் அவர்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த க. பட்டாபிராமன் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வ. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும்; திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வ. சுமதி அவர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ. லோகநாதன் அவர்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த க. பரமசிவன் அவர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. கு. சண்முகம் அவர்களுக்கும்,

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரெ. சண்முக வடிவேல் அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் அ.  கணேசன் அவர்களுக்கும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆ. சிவராம கிருஷ்ணன் அவர்களுக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேனி சீருடையான் அவர்களுக்கும்; நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மு. சொக்கப்பன் அவர்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சி. கைலாசம் அவர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த போ. மணிவண்ணன் அவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீ.கே. கஸ்தூரிநாதன் அவர்களுக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. வினோதினி அவர்களுக்கும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லை. ந. சொக்கலிங்கம் அவர்களுக்கும்,

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ச. பவுல்ராஜ் அவர்களுக்கும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ. சுப்பிரமணியன் அவர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் ப. வேட்டவராயன் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம. நாராயணன் ஆகிய 38  தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் தமிழ்ச் செம்மல் விருதுடன், விருதுத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து  சிறப்பித்தார்.   

 சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை செ. சுகுமாரன், செ. இராஜேஸ்வரி, மு. வளர்மதி, இராக. விவேகானந்த கோபால்,  அ.சு. இளங்கோவன், வீ. சந்திரன், ரா. ஜமுனா கிருஷ்ணராஜ், பேராசிரியர் தமிழ்ச்செல்வி, மறைந்த ந. தாஸ், முனைவர் மா. சம்பத்குமார் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், தமிழ்நாடு முதலமைச்சர் , சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுடன் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.   

இந்நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல்  துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்  துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Javaharlal Nehru University ,G.K. Stalin , Chief Minister M. K. Stalin gave 5 crore rupees to create a separate department of 'Tamil Literature' in Jawaharlal Nehru University..!
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...