×

வரும் 24-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம்

சென்னை: தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் வரும் 24-ம் தேதி சனிக்கிழமை காலை 10 நடைபெறுகிறது. இதில் அனைத்து அணி மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் உட்கட்சி தீர்த்தால் முடிந்த நிலையில் அனைத்து அணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதே போல் பல்வேறு அணிகளில் பொதுச்செயலர் என்ற பொறுப்புகளை மாற்றிவிட்டு தலைவர் என்ற புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுகவில் உள்ள 16 அணிகளுக்கான புதிய பொறுப்பாளர் மற்றும் நிவாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்குமான கூட்டமானது சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டமானது நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


Tags : anna ,Wynn , DMK, Executives of Teams, Members of Committees, Meeting, Anna Vidyalayam,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு