அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

சென்னை: அ.தி.மு.க.விலுள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டினார். வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமைக் கழக நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்; வரலாற்று சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் அனைவரும் இங்கு கூறியுள்ளனர்; எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசி இங்குள்ளவர்களுக்கு தான் உண்டு. உழைப்போரே உயர்ந்தவர் என எழுதி தான் எம்ஜிஆர் கையெழுத்திடாவார். அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும். கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாக கூறிய தற்குறி எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மருது அழகராஜ்; இயக்கத்தில் ஒளிய வந்த திருடன் இயக்கத்தை அபகரிக்க பார்க்கிறான்; நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் நாற்காலியை வழங்கியவர்களிடமே உரிய நேரத்தில் ஒப்படைத்த உத்தமர் ஓபிஎஸ் இவ்வாறு கூறினார்.

Related Stories: