×

நெல்லியாம்பதியில் காட்டு யானை கூட்டம்-வியூபாயின்ட் அருகே பரபரப்பு

பாலக்காடு :  பாலக்காடு மாவட்டம், நெம்மாராவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது நெல்லியாம்பதி சுற்றுலா தலம். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் இங்கு வந்து செல்வார்கள். இங்குள்ள 14வது கொண்டைஊசி வளைவு வியூ பாயின்ட் அருகே 3 குட்டிகளுடன் காட்டுயானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் பரபரப்பு அடைந்தாலும், சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இந்த காட்டு யானைகள் நெல்லியாம்பதி அய்யப்பன் கோயில், வியூ பாயின்ட், கைக்காட்டி ஆகிய இடங்களில் சாலைகளில் வழிமறித்து நிற்கிறது. இதனால் பலமணிநேரம் தாமத்திற்கு பின்னரே இந்த வழித்தடத்தை கடக்க முடிகிறது என அந்த வழியாக வாகனங்களை ஓட்டிச்செல்லும் டிரைவர்கள் தெரிவித்தனர்.

நெம்மாராவில் இருந்து நெல்லியாம்பதிக்கு செல்கின்ற சுற்றுலாப்பயணிகள், வழித்தடங்களில் வனவிலங்குகள் தென்பட்டால் வாகனங்களை நிறுத்தி கவனித்து செல்லுமாறு போத்துண்டி வனத்துறை சோதனைச்சாவடி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Nelliampathy , Palakkad : Palakkad district, 40 km from Nemmara. Nelliampathy tourist spot is far away. Thousands every day
× RELATED கூற்றநாட்டில் பேராசிரியர், மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது