முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து குற்ற சம்பவங்களை எளிதில் தடுக்கும் நன்னிலம் போலீசார்-வழக்குகளை கனிவுடன் பேசி விசாரிப்பதால் மக்கள் பாராட்டு

நன்னிலம் : நன்னிலம் பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து குற்ற சம்பவங்களில் எளிதில் தடுப்பது, வழக்குகளை கனிவுடன் பேசி விசாரித்து தீர்வு காண்பதால் பேலீசாரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நன்னிலம், பேரளம், காவல் நிலையங்கள், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம், நன்னிலம் தாலுகா எல்லைக்கு உட்பட்டதாகும்.

நன்னிலம் காவல் நிலையங்கள், பொதுமக்கள், தங்களின் பிரச்சினையை குறித்து, காவல் நிலையத்தை எளிதில் அணுகுமுறையில் செயல்பட்டு வருகிறது. காவல்துறை உங்களின் நண்பன், என்ற நோக்கோடு செயல்படும் நிலையில், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களை வரவேற்று, பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது, உரிய மனநல ஆலோசனை வழங்குவது, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப, நடவடிக்கைகளை மேற்கொள்வது, பொதுமக்களின் நலனை பேணிக்காக்கக் கூடிய வகையில், காவல்துறையின் ரோந்து பணிகளை மேற்கொள்வது, குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில், பாலியல் தொந்தரவு குறித்தும், சைபர் கிரைம் பிரச்னைகள் குறித்தும், பள்ளி மாணவர்களை காவல்துறைக்கு அழைத்து, அவர்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில், கூட்டங்கள் நடத்தப்பட்டு, குற்றங்கள் நிகழும் பொழுது, எவ்வாறு காவல் துறையை அணுகுவது, புகார்களை தெரிவிப்பதற்கான, அவசர எண் விபரங்களை, பள்ளி மாணவ மாணவியர் இடத்தில் எடுத்துக் கூறப்பட்டு, காவல்துறையினுடைய செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து விளக்கப்பட்டு, காவல்துறையில் புகார்கள் எவ்வாறு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று விரிவான விவரங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எடுத்து விளக்கப்பட்டது.

மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள், போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் இருக்கும் வகையில், விழிப்புணர்வு பிரசாரத்தை, நன்னிலம் காவல்துறையினர், துண்டு பிரசுரம் மூலமாகவும், ஒலிபெருக்கி வாயிலாகவும், பள்ளி கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தி, விளக்கியதோடு மட்டுமல்லாமல், போதைப் பொருட்களை, விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்வது, வழக்கு பதிந்து கைது செய்வது என்ற தொடர் நடவடிக்கையில், நன்னிலம் காவல் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், கடைகளில் விற்கப்படக்கூடிய குட்கா மற்றும் புகையிலை பொருட்களை, அவ்வப்பொழுது, திடீர் ஆய்வு மேற்கொண்டு, விற்பனை செய்பவர் மீது வழக்கு பதிவு செய்து, பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். சைபர் கிரைம் குற்றங்கள் நிகழாத வண்ணம், தடுக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தில், அவற்றைக் குறித்த விழிப்புணர்வு அவசர எண் விவரங்களை விளம்பரப் பலகைகளாக, பொதுமக்கள் அறியும் வண்ணம் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றங்கள் நிகழாதவாறு தடுக்கும் பொருட்டு, நன்னிலம் பேருந்து நிலையம், ஆண்டி பந்தல் நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதி, பனங்குடி கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கேமரா அமைக்கப்பட்டு கண்காணிப்பதால் குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நன்னிலம் காவல்துறை, பொதுமக்களின் புகார்களை கனிவோடு விசாரிப்பதோடு, உரிய சட்டரீதியான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு வருகிறார்கள். நன்னிலம் காவல்துறையின் தொடர் கண்காணிப்பு, மற்றும் துரித நடவடிக்கைகளால், பெரும் குற்றங்கள் நிகழாதவாறு சட்ட ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

சாலை விபத்துக்கள் நிகழும்போது, காவல்துறையின் பங்களிப்பு பாராட்டுக்குரியதாக அமைகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பனங்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது எதிரே வந்த கல்லூரி மாணவனின் வாகனம் மோதி, வாகனத்தோடு ஆற்றில் விழுந்த பொழுது, நன்னிலம் காவலர் ஒருவர், ஆற்றில் குதித்து பைக்குடன் விழுந்தவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். நன்னிலம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றிய காவலர் ஒருவர், மனநலம் பாதித்த ஒருவரை மீட்டு, உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, உரிய உறவின் இடம் ஒப்படைக்கும் பணியினை மேற்கொண்டார்.  இவ்வாறாக, மனிதநேய பணிகளோடு, நன்னிலம் காவல் நிலைய அலுவலர்கள், காவலர்கள், நன்னிலம் பகுதியில் அமைதியும், மக்களின் குறைகளையும், போக்கி பராமரித்து வருகிறார்கள்.

Related Stories: