கொரிய தீபகற்பத்தில் பதற்றம் பன்மடங்கு அதிகரிப்பு!: தென்கொரியாவில் இறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்.. வடகொரியாவின் ஆயுத சோதனைக்கு பதில் நடவடிக்கை..!!

தென்கொரியா: வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் சூழ்துள்ள நிலையில் அமெரிக்காவின் அதிநவீன போர்விமானங்கள் தென்கொரியாவில் தரையிறங்கி உள்ளன. அதிபர் கிம் ஜொங்-உன் தலைமையிலான வடகொரியா அணுஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இதனால் தென்கொரியா, ஜப்பான் ஆகிய அண்டைநாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா சோதனைசெய்ததை அடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணுஆயுதத்திறன்கொண்ட நவீன போர் விமானங்களை அமெரிக்கா தென்கொரியாவிற்கு அனுப்பிவைத்துள்ளது. அமெரிக்காவின் 52 வகை அதிநவீன குண்டுவீச்சு விமானங்களும் எப் 22 ரக போர் விமானங்களும் தென்கொரியாவில் தரையிறங்கியுள்ளன. அமெரிக்க போர் விமானங்கள் தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து தற்போது கொரிய தீபகற்பப்பகுதியில் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டுராணுவப்பயிற்சியை கைவிடவில்லையென்றால் வலுவான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வடகொரியா எச்சரித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது நவீன போர்விமானங்களை அனுப்பியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: