வடபழனி திருக்கோயிலில் தரிசன ஏற்பாடுகள் குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்டறிந்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: வடபழனி அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் தரிசன ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் பக்தர்களிடம் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை, தொன்மையான திருக்கோயில்களை அதன் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, திருவிழாக் காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திட தேவையான முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடபழனி, அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் கட்டணச் சீட்டுக்கள் வழங்குமிடத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, பொது தரிசனம் மற்றும்  சிறப்பு தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தர்களிடமும், சுவாமி தரிசனம் முடிந்து திரும்பிய பக்தர்களிடமும் தரிசன ஏற்பாடுகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

மார்கழி 5 ஆம் நாளான இன்று வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் வரிசை முறையை பார்வையிட்டேன். அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு தரிசனம் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணச் சீட்டு வழங்குமிடத்தை பார்வையிட்டு அங்கு பணியிலுள்ள பணியாளர்கள் எவ்வாறு கட்டணச் சீட்டுகளை வழங்குகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தார்.

அருள்மிகு முருகனை தரிசனம் செய்வதற்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். பொது வரிசையில் சாமி தரிசனம் செய்து திரும்பியவர்களிடம் கருத்து கேட்ட போது  அரை மணி நேரத்தில் தரிசனம் செய்யததாகவும், சிறப்பு கட்டணத்தில் தரிசனம் செய்தவர்களிடம் கேட்ட போது  பத்து நிமிடங்களில் தரிசனம் செய்யததாகவும் தெரிவித்தனர்.  மேலும், சிறு சிறு குறைகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

அவைகள் அனைத்தும் முழுமையாக களைவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது  இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ந.திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர் முனைவர் ந.தனபால், துணை ஆணையர்/செயல் அலுவலர் ஐ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Related Stories: