×

வானத்தில் பறந்தபடி நன்றி சொன்ன டாம் குரூஸ்

சென்னை: ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘டாப் கன்: மேவ்ரிக்’ என்ற படம், வரும் 26ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.  இதையடுத்து தனது ரசிகர்களுக்கு டாம் குரூஸ் நன்றி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனங்’ என்ற படத்தில் நடிக்கும் அவர், படப்பிடிப்பு இடைவேளையில் விமானத்தில் உயரமாகப் பறந்து, பிறகு அங்கிருந்து கீழே குதித்தபடி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘இங்கு நாங்கள் தென்னாப்பிரிக்காவை அசத்தி வருகிறோம். தற்போது ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனங்’ பாகம் 1 மற்றும் 2ஐ படமாக்கி வருகிறோம். தியேட்டர்களில் வெளியான ‘டாப் கன்: மேவ்ரிக்’ படத்தை ஆதரித்ததற்கு உங்களுக்கு நன்றி சொல்லாமல், இந்த ஆண்டு முடிவடைவதை நான் விரும்பவில்லை’ என்றார்.

Tags : Tom Cruise , Tom Cruise said thank you while flying in the sky
× RELATED மிஷன் இம்பாசிபிள் பாகம் 7, 8 தள்ளிவைப்பு