×

கேரள மருத்துவ கழிவுகளை தடுக்க தொடர் கண்காணிப்பில் சிறப்பு தனிப்படை: ஆஸ்ரா கர்க் தகவல்

சென்னை: கேரளாவில் இருந்து மருத்துவ  கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து  கண்காணிக்கப்படுகிறது என்று தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கர்க்  எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்பவரும் போது குறைந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அங்குள்ள இடைத்தரர்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து இங்கு கொட்டிவிடுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக தமிழக கேரளா எல்லையோர மாவட்டத்திலுள்ள கன ரக வாகன உரிமையாளர் கூட்டமைப்பினரிடம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது வருகின்றன.

தமிழக காவல்துறை தனிப்படை அமைத்து இவ்வழக்குகளின் குற்றவாளிகளை கண்காணித்து ஏழு கனரக வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக கேரள எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திற்குள் இது போன்று சட்ட விரோதமாக புளியரை சோதனை சாவடி வழியாக நுழைய முயற்சித்த 45 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையினால் ஊத்துமலை காவல் நிலைய சரகத்தில் கடந்த 13ம் தேதி பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் அடங்கிய கழிவுகளை கேரளாவில் இருந்து கொண்டு வந்த கிருஷ்ணகுமார் மற்றும் இடைதரகரான கருப்பசாமி மீது வழக்குபதிவு செய்து கழிவுகளை ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கேரளாவில் இருந்து உயிர் மருத்துவ கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுப்பதற்கு தென்மண்டலத்தில் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் இதில் சம்மந்தப்பட்டுள்ள இடைத்தரர்கள் பற்றிய தரவுகள் சேகரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

Tags : Task Force ,Kerala ,Asra Garg , Special Task Force on Continuous Monitoring to Prevent Medical Waste in Kerala: Asra Garg informs
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...