×

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடர பரிந்துரை: தேர்தலில் போட்டியிட முடியுமா?

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடர பரிந்துரைக்கப்பட்டதால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த கேபிடல் ஹில் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் டிரம்புக்கு எதிராக வழக்குத் தொடர, இவ்வழக்கை விசாரித்து வந்த விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. அதனால் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பிய டிரம்ப்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘என் மீது தவறான மற்றும் பாரபட்சமான குற்றச்சாட்டுகளை விசாரணை குழு சமர்ப்பித்துள்ளது. என் மீது வழக்குத் தொடர முயற்சிகள் நடந்துள்ளன; 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சதி நடந்துள்ளது. என்னையும் குடியரசுக் கட்சியையும் ஓரங்கட்ட சதிகள் நடக்கின்றன. இவ்வழக்கில் இருந்து மீண்டு வருவேன்’ என்று கூறினார்.

Tags : US ,President Trump , Recommendation to sue former US President Trump: Can he contest the election?
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...