×

சீசன் காலம் என்பதால் பஞ்சாபில் இருந்து சேலத்திற்கு மால்டா ஆரஞ்சு வரத்து துவக்கம்: ஆர்வத்துடன் வாங்கி செல்லும் மக்கள்

சேலம்: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மால்டா ஆரஞ்சு வரத்து துவங்கியுள்ளது. புளிப்பு மற்றும் இனிப்புத் தன்மை கொண்ட இந்த ஆரஞ்சு பழங்களை, சேலம் கடைவீதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பஞ்சாப் மாநிலம் கங்காநகர் பகுதியில் ‘கின்னு’ எனப்படும் மால்டா ஆரஞ்சு பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சாகுபடி செய்யப்படும் ஆரஞ்சு பழங்கள் தான், தமிழக சந்தைகளில் அதிகளவில் விற்பனைக்கு வரும்.

பிப்ரவரி, மார்ச் மாதத்தில் இவற்றின் வரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் தற்போது பஞ்சாபின் மால்டா ஆரஞ்சுகள் தமிழகத்தில்  விற்பனைக்கு குவிக்கப் பட்டு வருகிறது. இந்த வகையில் சேலம் கடைவீதிகளில் மால்டா ஆரஞ்சு பழத்ைத பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி சீனிவாசன் கூறியதாவது: நாக்பூர் ஆரஞ்சு பழங்களின் தோல் மிகவும் லகுவாக இருக்கும். ஆனால் மால்டா ஆரஞ்சு பழங்களின் தோல் சற்று தடிமனாகவும், தட்டையாகவும் இருக்கும். அதிக புளிப்பு மற்றும் இனிப்புத்தன்மை கொண்டது. சாறும் அதிகமாக கிடைக்கும்.

பஞ்சாப் மாநிலத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை மால்டா ஆரஞ்சு சீசன் காலமாகும். இதனால் தற்போது தமிழகத்திற்கு வரத்து அதிகரித் துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் வந்து இறங்கிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. இதில் சேலம் மார்க் கெட்டை பொறுத்தவரை 20 கிலோ கொண்ட ஒரு கிரேடு ரூ.1500 என்று விற்கப்படுகிறது. சில்லரையில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. நாக்பூர் ஆரஞ்சை விட, இதன் சுவை மாறுபட்டு இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Salem ,Punjab , Malta oranges start arriving in Salem from Punjab as it is the season: eager buyers
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை