×

நடுக்கடலில் உயிருக்கு போராடிய 104 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு

கொழும்பு: மியான்மர் நாட்டில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகள் சிலர் அவ்வப்போது கடல் மார்க்கமாக வெவ்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சமடைவது வழக்கம். அதன்படி மியான்மரில் இருந்து இந்தோனேசியாவுக்குச் சென்ற ரோஹிங்கியா அகதிகளின் இழுவைப் படகு நடுக்கடலில் சிக்கியது. இயந்திர கோளாறு காரணமாக அந்த இழுவைப் படகு, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் தள்ளாடியது. இலங்கை கடற்கரையின் 3.5 கடல் மைல் தொலைவில் இருந்த இழுவைப் படகை கண்டறிந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், அந்த படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பல மணி நேரம் போராடி அந்த படகை  நேற்று முன்தினம் இரவு வடக்கு துறைமுகத்திற்கு இழுத்துச் சென்றனர். அந்த இழுவைப் படகில் இருந்த 39 பெண்கள் மற்றும் 23 சிறார்கள் உட்பட 104 ரோஹிங்கியா அகதிகளையும் மீட்டு முதலுதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் 80 வயது முதியவர், ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Rescue of 104 Rohingya refugees who fought for their lives in the middle sea
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட...