புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறமுடியாவிடில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போராட முன்வர வேண்டும்: அதிமுக நிர்வாகி வையாபுரி மணிகண்டன் சாடல்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறமுடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போராட முன்வர வேண்டும் என்று ஆளும் கட்சி அதிமுகவை சேர்ந்த வையாபுரி மணிகண்டன் சாடியுள்ளார் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து விவகாரத்தில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் மோதல் முற்றுகிறது. இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த என்.ஆர்.காங்கிரஸ் லட்சுமி நாராயணன், உத்தியால்பேட்டையில் தொகுதி மக்களை திரட்டி மணிகண்டனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த வையாபுரி மணிகண்டன், இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்களுக்காக தான் ஆட்சி நடத்துகிறோம் என்றால் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில அந்தஸ்துக்காக போராட முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். தனக்கு எதிராக பேட்டிகொடுத்த நிழல் முதலமைச்சர் லட்சுமி நாராயணன், எந்த கட்சியில் உறுப்பினராக இருக்கிறார் என்று வையாபுரி மணிகண்டன் கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுகவின் ஓட்டுக்களை பெற்றுத்தான் கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது என்றும் அவர் சாடினார்.

Related Stories: