ஆம் ஆத்மிக்கு ரூ.60 கோடி கொடுத்துள்ளேன்: சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி: நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்துள்ளேன் என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததாகவும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகரை ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, அவரின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகர், பணமோசடி மற்றும் பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: