பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்-திருப்பதி கூடுதல் எஸ்பி உத்தரவு

திருப்பதி : புகார்கள் விரைவாக தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்க வேண்டும் என கூடுதல் எஸ்பி விமலகுமாரி உத்தரவிட்டார்.

திருப்பதி மாவட்ட எஸ்பி பி.பரமேஸ்வர ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கூடுதல் எஸ்பி விமலகுமாரி கலந்து கொண்டு புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

40 புகார்தாரர்கள் வந்து தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட விமலகுமாரி, ‘‘மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, ஒவ்வொரு வழக்குகளின் விவரங்களையும் தெரிந்து கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுமக்கள் அளிக்கும்  புகார்கள் அனைத்தும் சட்டப்படி விசாரிக்கப்பட்டு, புகார்தாரர்களின் பிரச்னைகளுக்கு, குறித்த காலத்திற்குள் விரைந்து தீர்வு காணப்படும்’’ என்று அறிவுரை வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: