×

முட்டிநாடு - கோலனிமட்டம் இடையே உள்ள நீரோடையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

ஊட்டி :  ஊட்டி அருகே முட்டிநாடு - கோலனிமட்டம் இடையே சுமார் 1 கிமீ., நீளமுள்ள நீரோடையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முட்டிநாடு, செலவிப்நகர், கோலனிமட்டம்,கொல்லிமலை சுற்று வட்டார பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் முட்டிநாடு துவங்கி கோலனிமட்டம் வழியாக காட்டேரி அணை வரை இரண்டு கி.மீ., தூரத்திற்கு நீரோடை உள்ளது.

காட்டேரி அணையின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மலை காய்கறி விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக இந்த நீரோடை உள்ளது. இதனை நம்பிேய விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் முட்டிநாடு முதல் கோலனிமட்டம் வரை ஒரு கிமீ., நீளத்திற்கு நீரோடையில் களை செடிகள் வளர்ந்து விளைநிலங்களில் இருந்து அடித்து வர மண் போன்றவைகள் குவிந்து தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் நீரோடையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் விளைநிலங்களுக்குள் புக கூடிய அபாயமும் நீடிக்கிறது.

இதனால் இந்த நீரோடையை தூர்வாற வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுமட்டுமின்றி மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனிடையே விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இந்த நீரோடையை தூர்வாற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் பொறியியல்த்துறை அதிகாரிகள் கூறுகையில், கோலனிமட்டம் முதல் முட்டிநாடு வரை உள்ள ஒரு கி.மீ நீளத்திற்கு தூர்வாற சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும், என்றனர்.



Tags : Muttinad ,Kolanimattam , Ooty: Farmers demand that a 1 km long stream should be dug between Muttinadu and Kolanimattam near Ooty.
× RELATED விலை உயர்வால் கேரட் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்