×

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (20-12-2022) காலை சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார். இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜ இளங்கோ மற்றும் V.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது.

Tags : Tamil Nadu State Human Rights Commission , Appointment of 2 members to Tamil Nadu State Human Rights Commission
× RELATED திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய...