×

திருவள்ளூர் மாவட்டம் அருகே கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரை பாலம் மூழ்கியது..!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அருகே கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொண்டஞ்சேரி, சாத்தரையில் இடையிலான பாலம் துண்டிப்பு ஆதனால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக  திருவள்ளூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் பெய்த கன மழையால் காவேரிபாக்கம் ஏரி நிரம்பி குவம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார ஏரிகளில் இருந்தும் உபரி நீர் வருவதால் ஒருவாரமாக கூவம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கொண்டச்சேரி, சாத்தரை இடையிலான தரை பாலம் மூழ்கியது.

ஏற்கனவே அங்கங்கே உடைந்து பாலம் துண்டானதால் சுற்றுவட்டார மக்கள் ஆபத்தான நிலையில் பாலத்தை கடந்து வருகின்றனர்.பள்ளி கல்லுரிக்கு செல்லும் மாணவர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தரை பாலம் உடைந்ததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு மழை காலத்திலும் இதே போன்ற நிலைகளை மேற்கொள்வதால் அரசு மேம்பாலம் கட்டி தரவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kouvam ,Thiruvallur , Land bridge submerged due to flood in Koovam river near Tiruvallur district..!
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி