×

குமரி சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 1.08 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 1.08 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் மிகவும் பழமைவாய்ந்த கோவில் தாணுமாலயசுவாமி கோவில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் இணையப்பெற்றதால் இக்கோவில் உருவானதாக தலவரலாறு கூறகிறது. இக்கோவில் உள்ள 18 அடி உயரமுடைய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உலகப்புகழ் பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத மூல நட்சத்திர தினத்தன்று நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இங்கு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் வரும் டிசம்பர் 23ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்க 1.08 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 1.5 டன் கடலை மாவு, 5 டன் சக்கரை, 150 டின் எண்ணெய், 50 கிலோ ஏலக்காய் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், 50 கிலோ முந்திரி, 50 கிலோ நெய், 20 கிலோ கிராம்பு கொண்டு லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Tags : Anjenayar Jayanthi ,Kumari Suhindra Thanumalayan Temple , Kumari, Anjaneyar Jayanti, 1.08 lakh lats
× RELATED ஜெயந்தி விழாவில் ஆயிரக்கணக்கானோர்...