×

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியை மேயர் பிரியா ஆய்வு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-5 50-வது வார்டில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியினை மேயர் பிரியா ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் காலையில் சிற்றுண்டிகள் கிடைக்காத நிலையில் வகுப்பில் சோர்வு நிலையில் உள்ளதால் கல்வி கற்பதில் தொய்வு ஏற்படுவதை நீக்கும் பொருட்டு காலைச் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று மேயர் பிரியா கூறியுள்ளார்.  

அரசுப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம், முதல் கட்டமாக, 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், சென்னை மேயர் பிரியா அறிவித்தார்.

சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சிஐடிஐஐஎஸ் திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் 28 பள்ளிகள் முழுமையாக நவீன வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட உள்ளது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியினை மேயர் பிரியா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Tags : Mayor ,Priya , Mayor Priya inspects breakfast provided to students in corporation schools
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!