உலக கோப்பை கால்பந்து சாம்பியன் அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: என்ன ஒரு சிறப்பான போட்டி. இறுதிவரை மனந்தளராமல் போராடிய பிரான்ஸ் அணியின் ஆட்டமும், பப்பேயின் ‘ஹாட்ரிக்’ கோலும் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக இதனை ஆக்கிவிட்டது. பிபா உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கும், அணி தலைவர் மெஸ்ஸிக்கும் எனது வாழ்த்துகள். மார்டினேசுக்கு தனியாகப் பாராட்டை தெரிவித்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: