ஹஜ் பயணம் மேற்கொள்ள மாநில வாரியான ஒதுக்கீட்டை உடனே அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள மாநில வாரியான ஒதுக்கீட்டை உடனே அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: ஜூன் மாதம் ஹஜ் பயணம் மேற்கொள்ள உலகத்தின் பல்வேறு நாடுகளில் முன்பதிவு தொடங்கிவிட்டன. ஆனால், இதுவரை ஹஜ் பயணம் தொடர்பாக ஒன்றிய பாஜ அரசு அறிவிக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இது, இஸ்லாமியர்கள் மத்தியில் மிகுந்த வருத்ததையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல் இந்தியாவில் ஹஜ் பயணம் மேற்கொள்ள மாநில வாரியான ஒதுக்கீட்டை உடனடியாக ஒன்றிய அரசு அறிவிக்க  வேண்டும்.

Related Stories: