×

இந்தியாவுடன் ஒருநாள் தொடர்; நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இல்லை: லாதம் தலைமை பொறுப்பு ஏற்கிறார்

வெலிங்டன்: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள நியூசிலாந்து அணியில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, டாம் லாதம் தலைமை பொறுப்பேற்கிறார். இந்தியா வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜன.18ம் தேதி  முதல் தலா  3 ஆட்டங்களை ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இந்த டூர் முடிந்ததும், சொந்த மண்ணில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 2 டெஸ்டில் மோத உள்ளது. அதற்கு முன்பாக, பாகிஸ்தான் செல்லும் நியூசி. அணி அங்கு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்திய தொடர்களுக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பாக். சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன், அடுத்து இந்தியாவுக்கு வராமல் தாயகம் திரும்பி டெஸ்ட் தொடருக்கு தயாரா உள்ளார் என்றும்,  தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட்டுக்கும் இந்திய டூரில் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நியூசி. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய சுற்றுப்பயணத்தில் வில்லியம்சனுக்கு பதிலாக டாம் லாதம் கேப்டன் பொறுப்பை ஏற்பார். வில்லியம்சன்னுடன்,  டிம் சவுத்தீ,  ஷேன் ஜூர்கன்சன் ஆகியோரும்  பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புவார்கள். அவர்களும் இந்தியா செல்ல மாட்டார்கள். ஊழியர் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வில்லியம்சன், சவுத்தீ ஆகியோருக்கு பதிலாக மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி  ஆகியோர்இடம் பெறுவார்கள். கூடவே பயிற்சியாளர் கேரிக்கு பதிலாக அணியுடன்  லூக் ரோஞ்சி பயணம்  செய்வார். அதுமட்டுமின்றி காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஹென்றி நிகோல்ஸ்,  பந்து வீச்சாளர் ஈஷ் சோதி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். புதுமுக வீரரும், ஆல் ரவுண்டருமான ஹென்றி ஷிப்லி  முதல் முறையோக நியூசி. அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் பாக், இந்திய சுற்றுப்பயணங்களின் போது  நியூசி அணிக்காக களம் காணுவார்.

Tags : ODI ,India ,Williamson ,New Zealand ,Latham , ODI series with India; Williamson out of New Zealand squad: Latham takes over as captain
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...