×

மெட்ரோ இரயில் நிலையங்களில் நடைபெற்ற இலவச CPR விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் 1,470 நபர்கள் பயன்: சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ இரயில் நிலையங்களில் நடைபெற்ற இலவச CPR விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் 1470 நபர்கள் பயன் பெற்றனர் என சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மருத்துவப் பயிற்சிக்கான TACT அகாடமியுடன் இணைந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக CPR (Cardiopulmonary resuscitation) போன்ற உயிர்காக்கும் முதலுதவி வழங்கும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடப்பாண்டு மே 28, 2022 முதல் டிசம்பர் 18, 2022 வரை மெட்ரோ இரயில் நிலையங்களில் நடைபெற்றது.

இதில் 1470 பேர் பயன்பெற்று உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி 17.12.2022 அன்று பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ இரயில் நிலையத்திலும் 18.12.2022 அன்று தண்டையார்ப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்திலும் நடைபெற்றது. மெட்ரோ பயணிகள், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ஊழியர்கள் உட்பட 120 நபர்கள் இந்த முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு வாழ்க்கையை சேமிக்க உதவுகிறது என்பதை இந்நிகழ்ச்சியின் மூலமாக தெரிந்து கொண்டனர்.

இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயனடைந்தனர். CPR-ன் சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் 28.05.2022 முதல் 18.12.2022 வரை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 29 விடுமுறை நாட்களில் 58 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த இலவச CPR விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மெட்ரோ பயணிகள், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ஊழியர்கள் உட்பட சுமார் 1470 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

Tags : Chennai Metro Railway Administration , 1,470 people benefited from free CPR awareness programs held at metro stations: Chennai Metro Rail Administration Information
× RELATED சென்னையில் வார இறுதியில் ரூ.100க்கு ஒரு...