வடபழனி முருகன் கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் கடிதம்..!!

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். கோயிலில் ரூ.50க்கான 3 டிக்கெட்களுக்கு பணம் பெற்று ரூ.105க்கு மட்டும் டிக்கெட் தந்ததாக நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முறைகேடு தொடர்பாக செயல் அலுவலரிடம் புகாரளிக்க முயற்சித்தும் ஊழியர்கள் கடுமையாக நடந்ததாகவும் கடிதத்தில் நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: