×

ஊட்டி மான் பூங்கா சாலையில் உலா வந்த காட்டுமாடு கூட்டம் நடைபயிற்சி சென்றவர்கள் ஓட்டம்

ஊட்டி :  ஊட்டி மான் பூங்கா சாலையில் உலா வந்த காட்டுமாடுகள் கூட்டத்தை பார்த்து நடைபயிற்சி சென்றவர்கள் அச்சமடைந்தனர். வனப்பரப்பு மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் புலி,சிறுத்தை,யானை,காட்டுமாடு,மான்,கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம பகுதிகளில் வனத்தை ஓட்டியே அமைந்துள்ளதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுவது வழக்கம். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்ைக கணிசமாக உயர்ந்துள்ளது. இவை கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவது, சாலையை கடந்து செல்வது போன்றவற்றை நாள்ேதாறும் காண முடியும். இந்நிலையில் ஊட்டி மத்திய பஸ் நிைலயம் பின்புறம் மரவியல் பூங்கா உள்ளது.

இப்பூங்கா அருகில் இருந்து மான் பூங்கா வழியாக தேனிலவு படகு இல்லம் மற்றும் காந்தல் பகுதிக்கு செல்ல சாலை உள்ளது. இச்சாலையில் நாள்தோறும் காலை நேரங்களில் ஊட்டி நகர மக்கள் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வாடிக்கை. இந்நிலையில் நேற்று காலை பலர் இச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மான் பூங்கா அருகே அருகில் இருந்த வனத்தில் இருந்து வெளியேறிய காட்டுமாடு கூட்டம் அப்பகுதியில் முற்றுகையிட்டிருந்தது. இதனால் நடைபயிற்சி சென்றவர்கள் அச்சமடைந்தனர். நீண்ட நேரமாக காட்டு மாடுகள் அப்பகுதியில் முகாமிட்டிருந்த நிலையில் பலர் திரும்பி சென்றனர்.



Tags : Ooty Deer Park Road , Ooty: The walkers were scared to see a herd of wild cows roaming on the Ooty Deer Park road.
× RELATED கன்னியாகுமரி மாவட்டம்...