×

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. ஆய்வு

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் 1,500க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, பல்கேரியா, தென் கொரியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 1946ன்கீழ் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் 21ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கி உட்பட பல்வேறு பொருட்கள் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் சோதனையில் சிக்கியது.

மேலும் இதுதொடர்பாக டெல்லியை சேர்ந்த ஒருவரை பிடித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் திருச்சி சிறப்பு முகாமில் கைதிகளாக தங்கியிருந்தவர்களின் செல்போன் அழைப்புகள் வந்தது தெரியவந்தது. ேமலும் அடிக்கடி சிறப்பு முகாமில் இருந்து அந்த நபரை சிலர் தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சிறப்பு முகாமில் தங்கியுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 பேரிடம் செல்போன், தங்கம், லேப்டாப், சிம்கார்டு உள்ளிட்டவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சோதனையின் மூலம் கேரளாவில் சிக்கிய போதை பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுக்கும், சிறப்பு முகாமில் உள்ள 9 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சிக்கு கேரள மாநிலம் கொச்சினில் இருந்து 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை 10.45 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திருச்சி காவல்துறை அனுமதி பெற்று சிறப்பு முகாமுக்கு சென்று, சந்தேக வளையத்தில் உள்ள 9 பேரிடம் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னர் 9 பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்று என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக திருச்சி கலெக்டர் பிரதீப்குமாரிடம் அனுமதி என்ஐஏ அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தவுடன் 9 பேரையும் சென்னை அழைத்து சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தெரிகிறது.


Tags : NIA ,Special Camp for Refugees ,Trichy Central Jail Complex , NIA at Special Camp for Refugees in Trichy Central Jail Complex. Study
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை