×

பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மரியாதை

மறைத்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பழகன் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்பழகன் படத்திற்கு மரியாதையை செலுத்தினார். மறைந்த அன்பழகன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில்  பிறந்துள்ளார். இவர் இயற் பெயர் ஆனது ராமய்யா, திராவிட சிந்தனைகளில் ஆர்வம் கொண்ட இவர் பெயரை அன்பழகன் என்று மாற்றி கொண்டார்.

 அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.எ. தமிழ் படித்தவர். பின்னர் 1947 ஆண்டு முதல் 57 ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லுரியில் பேராசிரியர் ஆக பணியாற்றினார். இதனை தொடர்ந்து 1977 ஆண்டு தி.மு.க. பொது செயலாளர் அக நியமிக்கப்பட்டு பொறுப் பேற்றுக் கொண்டார், கடைசியாக 2011 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரது அரசியல் வாழ்வில் ஒரு முறை மேல்சட்ட உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், 9 முறையும் நாடாளமன்ற உறுப்பினராகவும் 1 முறை தேர்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.

 தி.மு.க ஆட்சி காலத்தில் சுகாதாரம், சமூகத்துறை, நீதித்துறை, கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். மேலும் இவர் எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும் எழுதியுள்ளார், இந்த நிலையில் அவரது நூற்றாண்டு நினைவு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து அன்பழகன் நூற்றாண்டை முன்னிட்டு கல்லுரி மாணவர்களுக்கு புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.        


Tags : K. Closing ,Anbakhagan ,Chief Minister ,G.K. , Professor K. Anpahagan Centenary Celebration: Honored by Chief Minister Stalin
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...